top of page

வாழிய நிலனே - 3

வெண்முரசில் வரும் தேசங்கள், ஆறுகள், நிலங்கள், நகர்கள், கதை மாந்தர் பயணங்கள் மற்றும் காட்சிச் சித்தரிப்புகளை ஒரு ஒட்டுமொத்தத்தின் பிண்ணனியில் வைத்துப் புரிந்து கொள்வது அவசியம். அதற்கான சிறு முயற்சியே இத்தொடர் கட்டுரைகள்.


(முதற்கனல் 12 : எரியிதழ், ஓவியம்: ஷண்முகவேல்)

இந்த தேசத்தைப் புரிந்து கொள்வதென்பது இந்திய வரைபடங்கள் குறித்து புத்தகங்களில் மட்டும் பார்த்தோ, வாசித்தோ வருவதன்று. பல்லாண்டுகளாக ஆசிரியர் செய்த பெரும் பயணங்களின் அனுபவத் தொகுப்பு, அதனாலேயே இது ரத்தமும் கண்ணீரும் போல உண்மையாக இருக்கிறது.

வெண்முரசில் பாரதம்

வெண்முகில் நகரத்தில் - காம்பில்யத்திலிருந்து வடக்கே உசிநாரநாடு, அதற்கப்பால் குலிந்த நாடு, அதற்கப்பால் கிம்புருடநாடு, அதற்கப்பால் ஸ்வேதகிரி - வெண்பனி மலையடுக்குகள், அத்துடன் வடக்கே ஜம்புத்வீபம் முடிவடைகிறது என்று சூதர் குறிப்பிடுகிறார். தெற்கே சென்றால் சேதிநாடு, அப்பால் புலிந்த நாடு, அதற்கப்பால் விந்தியமலை, விதர்ப்பம், வாகடகம்,அஸ்மாரகம், குந்தலம். அதற்கும் தெற்கே வேசரம், திருவிடம், காஞ்சி பெருநகர், அதற்குமப்பால் தமிழ்நிலம்- சேரர்கள் சோழர்கள் பாண்டியர்கள். பாண்டியர்களின் தொல்நகரமான மாமதுரை. அதற்குமப்பால் தீவுகள். மணிபல்லவம், நாகநகரி என்று சூதர்கள் உரைக்கிறார்கள்


இந்தியாவில் பல இடங்களுக்கு பயணம் செல்கையில் வெண்முரசில் அந்த இடங்கள் குறித்து வாசித்த குறிப்புகளும், வர்ணனைகளும், சம்பவங்களும் மனதில் நிறைந்து தளும்பும். "எங்கள் தந்தையர் நாடென்னும் பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே" என்ற பாரதியின் வரியை உள்ளுக்குள் கிளர்த்தும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பீஷ்மர் கண்ட கங்கையை, அம்பை வாழ்ந்த காசிப் படித்துறையை, ஞானியர் தரிசித்த கோமுகத்தை நானும் காண்கிறேன் என்னும் பேருணர்வு உள்ளே மேலோங்கி நெஞ்சம் நிறையும். பண்பாட்டுசரடால் இணைக்கப்பட்ட அந்த பாரதம் எனும் ஒற்றை நிலத்தின் சித்திரத்தையே வெண்முரசு உருவாக்கி அளிக்கிறது.


இந்த தேசத்தைப் புரிந்து கொள்வதென்பது இந்திய வரைபடங்கள் குறித்து புத்தகங்களில் மட்டும் பார்த்தோ, வாசித்தோ வருவதன்று. பல்லாண்டுகளாக ஆசிரியர் செய்த பெரும் பயணங்களின் அனுபவத் தொகுப்பு, அதனாலேயே இது ரத்தமும் கண்ணீரும் போல உண்மையாக இருக்கிறது. ”நிலவரைபடம் என்பது நிலம் அன்று; நிலத்தின் நாமறிந்த ஒரு சாத்தியம் மட்டுந்தான் இல்லையா?” என்ற தர்மரின் வரியை இவ்விடத்தில் நினைவு கொள்ளலாம்.


அன்றும் இன்றும்


இது ஒரு எளிய அட்டவணையாக வெண்முரசின் நிலங்களும் சிறுகுறிப்புகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும் விரிவாக அந்நிலம் குறித்து வெண்முரசு கூறும் செய்திகளும், நில அமைப்பு குறித்தும் இக்கட்டுரையின் பிற பகுதிகளில் வாசித்தறியலாம்.

அன்றைய பெயர்

இன்றைய பகுதி (உத்தேசமாக)

வெண்முரசு சார்ந்த குறிப்பு

​வேசரம்

​கிருஷ்ணைக்கும் கோதாவரிக்கும் இடையே உள்ள நிலம்.

வெண்முரசு இங்கிருந்தே தொடங்குகிறது. இளநாகன் பயணத்தில் இந்நிலத்தைப் பற்றிய விரிவான குறிப்புகளைக் காணலாம். வசுதேவர் ஒரு வேசர தேசத்து இளவரசியை மணந்திருக்கிறார் (காண்டீபம்)

அஸ்தினபுரி

உத்தரப்பிரதேசத்தில் மீரட் அருகே கங்கைக் கரையில் இருந்த நகரம்

குருகுலத்தின் தலைநகரம்.

1952-களில் அகழ்வாய்வுகள் நடந்திருக்கின்றன. பாரதக்கதையின் மையம்

இந்திரபிரஸ்தம்

தில்லி

பாண்டவர்கள் தலைநகரம். இந்திரனின் நகரம் என திரௌபதியின் கனவு மண்ணில் மலர்ந்த நகரம்.

காசி

காசி

கங்கைக் கரையில் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் தொன்மையான நகரம்

சப்தசிந்து

பஞ்சாப் / பாகிஸ்தான் - நதிகள் பாயும் வளமான பகுதி

வேதங்களில் (ரிக்வேத நதிஸ்துதி சூக்தம்) குறிப்பிடப்படும் ஏழு நதிகள் - சுதுத்ரி(சட்லஜ்), பருஷ்னி(ரவி), அசிக்னி (செனாப்), விதஸ்தா(ஜீலம்), விபஸ்(பியாஸ்), குபா(காபுல்), சுஷோமா(சோன்) ஆகியவை இமயமலைச் சரிவிறங்கி பாயும் நிலம்

மூலஸ்தானநகரி / ஹம்சபுரம்

பாகிஸ்தானின் மூல்தான்

சிகண்டி இங்குள்ள சூரியன் ஆலயத்தைப் பார்க்கிறான்.

இன்றும் பாகிஸ்தானின் முல்தான் நகரில் தொல்லியல் சிதைவுகளாக எஞ்சி இருக்கிறது

சிபிநாடு 

சைப்யபுரியை தலைநகராகக் கொண்ட பலுச்சிஸ்தானின்  சிபி பகுதி. வறண்ட பாறைச்சிகரங்களான ஸென்யாத்ரி(ஜென்), போம்போனம்(பம்போர்), துங்கானம்(துங்கன்) ஆகியவற்றை எல்லையாகக் கொண்ட சிறு நாடு

சிகண்டி பீஷ்மரைத் தேடி இங்கு செல்கிறான். இளவரசி தேவிகையை பூரிசிரவஸ் சந்திக்கும் பகுதிகளில் இதன் பாலைநிலம் விரிவாக வருகிறது  

கூர்ஜரம்

வடக்கே சிந்து முதல் தெற்கே குஜராத்தின் கட்ச் வரை.

கூர்ஜரம் மழைப்பாடலிலேயே அறிமுகமாகிறது. பிறகு பிரயாகையில் கிருஷ்ணன் துவாரகைக்கு நிலம் தேரும் போது கூர்ஜரத்தின் தெற்கே இடம் தெரிவு செய்கிறான். கஜ்ஜர்கள் குறித்த குறிப்பும் காண்டீபத்தில் ரைவத மலைப் பகுதியில் வருகிறது.

தேவபாலபுரம்

கராச்சிக்கு அருகே உள்ள தேபல் 

சிந்துவின் முக்கியமான கடல் வணிகத் துறைமுகம். அன்று பெருந்துறைமுகமாக இருந்திருக்கிறது. பீஷ்மர் மழைப்பாடலில் இத்துறைமுகத்துக்கு வருகிறார்.

மானஸுரா தீவு

கராச்சிக்கு அருகே உள்ள மனோரா தீவு

மானஸுரா தீவுக்கு அருகே தேவபாலபுரம் இருந்திருக்கிறது

மிருதஜனநகரம் / இறந்தவர்களின் நகரம்

மொஹெஞ்சதாரோ

காந்தாரப் பயணத்தில் பீஷ்மர் கைவிடப்பட்ட நகராக இதைக் காண்கிறார்

காந்தாரம்

காந்தஹார் முதல் [ புருஷபுரம்] பேஷாவர் வரை - வடமேற்கு பாகிஸ்தான் - கிழக்கு ஆப்கனிஸ்தான் வரை

மகாபாரதக்கதையின் முக்கியமான ஒரு தேசம். சகுனியின் தேசம், 

காந்தாரியின் மணம் நிகழும் நகரம்.

தாரநாகம்

காந்தஹாருக்கு அருகே உள்ள தார்னாக் நதி

இந்நதியைக் கடந்து காந்தார நகரத்தில் நுழைகிறார் பீஷ்மர்

மார்த்திகாவதி

-

யாதவர்களில் போஜர்களின் தலைநகரம். யமுனைக் கரையில் அமைந்தது. குந்தியின் மணத்தன்னேற்பு நிகழும் நகரம்

மதுராபுரி

ஆக்ரா அருகே மதுரா

யாதவர்களின் முக்கியமான நகரம். கம்சனின் தலைநகரமாக திகழ்கிறது. பிறகு வசுதேவரும், பின்னர் பலராமரும் ஆள்கிறார்கள்

நந்ததேவி

இந்தியாவின் இரண்டாவது உயரமான சிகரம் ஆகிய நந்ததேவி சிகரம்

அர்ஜுனன் பிறக்கும் இடம் இந்த சிகரத்துக்கு அருகே உள்ள ஒரு மலர்வெளி

ஏழ்பனை நாடு

கடல்கொண்டுவிட்ட தமிழ்நிலத்தின் ஒரு பகுதி

ஏழ்பனைநாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன் கடல்கொண்ட தமிழ் நிலத்தில் இருந்து பயணத்தைத் தொடங்குகிறான்

மாமதுரை

கடல்கொண்டுவிட்ட மூதூர் மதுரை

கடற்கரையில் அமைந்திருந்த பாண்டியர்களின் தலைநகரம் - வண்ணக்கடல் இளநாகன் பயணம்

புகார்

கடல்கொண்டுவிட்ட காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்)

காவிரி ஆற்றின் கழிமுகம் , சோழர்களின் முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்று - வண்ணக்கடல் இளநாகன் பயணம்

திருவரங்கம்      

ஸ்ரீரங்கம்

வண்ணக்கடல் இளநாகன் பயணம்

சிற்றம்பலநகரி

சிதம்பரம்

வண்ணக்கடல் இளநாகன் பயணம்

எரிதழல் இலங்கிய செம்மலைச் சிகரம்

திருவண்ணாமலை

வண்ணக்கடல் இளநாகன் பயணம்

காஞ்சி

காஞ்சீபுரம்

பலவிதமான கலைகளின், மெய்வழிகளின் மையமாகத் திகழ்கிறது - வண்ணக்கடல் இளநாகன் பயணம்

திருவிடம்

காஞ்சியில் இருந்து வடக்கே கோதைவரை விரிந்திருக்கும் பகுதி

வண்ணக்கடல் இளநாகன் பயணம், கிராதம் சண்டன் பயணம்

காளஹஸ்தி

காளஹஸ்தி

சுவர்ணமுகி நதிக்கரையில் அமைந்த காடு. காளாமுகர்கள் வழிபடும் சிவத்தலம். வண்ணக்கடல் இளநாகன் பயணம், கிராதம் சண்டன் பயணம்

குந்தலநாடு

கோதாவரிமுதல் நர்மதை வரை – ஆந்திரா/ தெலுங்கானா

வண்ணக்கடல் இளநாகன் பயணம்

விஜயபுரி

நாகார்ஜுனகொண்டா/ நால்கொண்டா  

வண்ணக்கடல் இளநாகன் பயணம்

எத்திப்பொத்தலா

எத்திப்பொத்தலா அருவி - நாகார்ஜுன சாகர்

வண்ணக்கடல் இளநாகன் பயணம்

தான்யகடகம்

தாரணிக்கோட்டா

வண்ணக்கடல் இளநாகன் பயணம்

அஸ்மாகம்

இன்றைய தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிராவின் சில பகுதிகள் அஸ்மாக தேசம் என்றழைக்கப்பட்ட 16 மகாஜனபதங்களில் ஒன்று

வண்ணக்கடல் இளநாகன் பயணம்

இந்திரகிலம்

விஜயவாடா

வண்ணக்கடல் இளநாகன் பயணம்

நரசபுரி

நர்சாபூர்

வண்ணக்கடல் இளநாகன் பயணம்

ராஜமகேந்திரபுரியை

ராஜ்முன்றி/ ராஜமஹேந்திரவரம்

வண்ணக்கடல் இளநாகன் பயணம்

கலிங்கபுரி

ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தில் உள்ள கலிங்கபட்டணம்

வண்ணக்கடல் இளநாகன் பயணம்

சிலிகை

சில்கா ஏரி

வண்ணக்கடல் இளநாகன் பயணம்

சிசுபாலபுரி

புபனேஸ்வருக்கு அருகே சிசுபால்கர்

வண்ணக்கடல் இளநாகன் பயணம் 

அர்க்கபுரி

கோனார்க்

வண்ணக்கடல் இளநாகன் பயணம் 

சம்பாபுரி

பீகாரின் சம்பா நதிக்கரையில் அமைந்த சம்பாபுரி

அங்கதேசத்துத் தலைநகரம்

வண்ணக்கடல் இளநாகன் பயணம்

ஹிரண்மயம்

ஆசுர வனதேசத்தின் தலைநகரமாக இருந்து அழிந்த பெருநகரம், சத்தீஸ்கர் பகுதியாக இருக்கலாம்.

வண்ணக்கடல் இளநாகன் பயணம்

சர்மாவதி

சம்பல் நதி 

வண்ணக்கடல் இளநாகன் பயணம்

வேத்ராவதி

பேத்வா நதி

வண்ணக்கடல் இளநாகன் பயணம்

கோகுலம்

மதுராவுக்கு அருகே அமைந்த ஆயர் நிலம்

நீலம்

பிருந்தாவனம்

மதுராவுக்கு அருகே அமைந்த ஆயர் நிலம்

நீலம்

காளிந்தி

யமுனை

களிந்த மலை பிறக்கும் கரிய நதி

பாஞ்சாலம்

உத்தரப்பிரதேசத்தின் பகுதிகள்

பாரதத்தின் மற்றொரு முக்கிய தேசம்

காம்பில்யம்

இன்றைய ஃபரூக்காபாத் மாவட்டத்தின் காம்பில் ஆக இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது

தட்சிணபாஞ்சாலத்தின் தலைநகர் காம்பில்யம், திரௌபதியின் மணத்தன்னேற்பு நிகழும் நகரம்

சத்ராவதி

உத்தரபிரதேசம் பேரெலி மாவட்டம் அருகே இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது

உத்தர பாஞ்சாலத்தின் தலைநகர் காம்பில்யம்

ரிஷிகேசம் 

ரிஷிகேஷ்

கங்கை மலையிறங்கி சமநிலத்தைத் தொடும் இடம், பிரயாகை துருபதனின் கங்கைக் கரைப் பயணம்

தேவப்பிரயாகை 

பாகீரதி-அளகநந்தா நதிகள் சந்திக்கும் தேவப்பிரயாக்

பிரயாகை துருபதனின் கங்கைக் கரைப் பயணம்

சௌவீரம்

பலுசிஸ்தான் பகுதியில் அமைந்த சிறிய நாடுகளில் ஒன்று  

பாரதவர்ஷத்தின் வடமேற்கே இமயமலையின் அடிவாரத்தில் உள்ள நாடு என்று பிரயாகையில் விதுரர் திருதராஷ்டிரரிடம் விவரிக்கிறார்

வாரணவதம்

உத்தரப்பிரதேசத்தில் பார்னவா கிராமம் வாரணவதம் என்று சொல்லப்படுகிறது

பாண்டவர்களை அழிப்பதற்கு எரிமாளிகை அமைக்கப்பட்ட இடம்

சிவன் யானையின் கரிய தோலை உரித்துப்போர்த்துக்கொண்ட இடம் என்று புராணக் கதை விளக்கம்

சோனகநாடு

அரேபிய நிலங்கள்


காப்பிரிகள்/ காப்பிடர்கள் 

ஆப்பிரிக்கர்கள்

எகிப்து பிரமிடுகளின் குறிப்பு பிரயாகையில் வருகிறது

இடும்பவனம்

இமாச்சலப் பிரதேசத்தில் இடும்பிக்கு கோவில் இருக்கிறது. அப்பகுதியாக இருக்கலாம்

அரக்கர்குலம் வாழும் மானுடர் அணுகமுடியாக்காடு. பீமனின் மனைவி இடும்பி, மகன் கடோத்கஜனின் நிலம்

சாலிஹோத்ரசரஸ்

சாலிஹோத்ர குருமரபின் முதன்மை ஆசிரியரான சாலிஹோத்திரர் சிராவஸ்தியில் (உத்திரபிரதேசம்) வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

சாலிஹோத்ர குருகுலம் அமைந்த பகுதி

ஏகசக்ரநகரி

சரயு நதிக்கு அருகே

பீமனால் கொல்லப்பட்ட பகாசுரன் வாழ்ந்த பகுதி

ரேணுபுரி

இன்றைய வட கர்நாடக-ஆந்திர எல்லை

பரசுராமரின் அன்னை ரேணுகையின் நாடு, பரசுராமரின் குருகுலம் அமைந்த பகுதி

மத்ரநாடு

வடமேற்கு பஞ்சாப்

சல்லியரின் நாடு. மாத்ரி பிறந்த தேசம்

பால்ஹிகநாடு 

பலுசிஸ்தான் பகுதி

பூரிசிரவஸின் தேசம்

பால்ஹிக கூட்டமைப்பு

மத்ரநாடு(பாகிஸ்தானின் வடமேற்கு பஞ்சாப்), சௌவீர நாடு(பாகிஸ்தானின் சிறுபகுதி), பூர்வபால்ஹிகநாடு(வடமேற்கே இமய அடுக்குகளில் உள்ள மலைப்பகுதிகள்), சகநாடு(பால்ஹிக நிலத்துக்கும் மேலே), யவனநாடு (இது இமயமலையின் அடுக்குகளுள் உள்ள மலைப்பகுதிகள்) , துஷாரநாடு(துர்க்மெனிஸ்தான்) ஆகிய ஆறும் முதன்மை அரசுகள்

இமய அடுக்குகளில் அமைந்த மலைச்சிற்றூர்கள் பால்ஹிக மலைக்குடிகளால் ஆளப்படுகின்றன


கரபஞ்சகம், கலாதம், குக்குடம், துவாரபாலம் என்னும் நான்கும் மலைக்குடிகளின் அவையரசுகள்

துவாரகை

குஜராத்தில் கடல் கொண்டுவிட்ட தொன்மையான கடற்கரை நகரம். கட்ச் பகுதி, குஜராத்

கிருஷ்ணராகிய இளைய யாதவர் உருவாக்கும் பெருந்துறைமுகநகரம்

பீதர்கள்

சீன தேசத்தவர், மஞ்சள்(பீத) நிறமானவர்கள்

பீதர்கள் வணிகத் தொடர்பில் இருந்ததன் விரிவான குறிப்புகள் வருகின்றன, கடல் துறைமுக நகரங்களில், பட்டுவழிப்பாதை எனப்படும் பாலை வணிகப் பாதைகளில் தொடர் பயணங்களில் இருக்கிறார்கள். பல பீதர் நாட்டுப் பொருட்கள் புழக்கத்தில் இருக்கின்றன

யவனர்கள்

கிரேக்கர்கள்

வணிகத் தொடர்புகள், யவனக் குதிரைகள், யவனத் தேர்கள் முதலிய குறிப்புகள்

ஹரிணபதம்

யமுனைக் கரை

சத்யபாமையின் ஆயர்நிலம்

காளநீலம்

யமுனைக் கரை

கிருஷ்ணன் மணக்கும் எட்டு தேவியரில் ஒருத்தியான ஜாம்பவதியின் குலம் வாழும் ஜாம்பவர்களின் காடு

விதர்ப்பம்


மகாராஷ்டிரத்தின் விந்தியமலையடிவாரப்பகுதி, பூனா வட்டாரம் அமராவதி மாவட்டத்தின் குண்டினபுரி என்னும் கிராமமே கௌண்டின்யபுரி என்னும் தலைநகரமாக இருந்திருக்கலாம்

ருக்மிணியின் தேசம்

கோசலம்

உத்தரப்பிரதேசத்தின் அவத் அருகே உள்ள பகுதி, அதன் தலைநகர் அயோத்தி

கிருஷ்ணன் மணக்கும் எட்டு தேவியரில் ஒருத்தியான நக்னஜித்தியின் தேசம்

அவந்தி

இன்றைய மத்தியபிரதேசத்தின் மால்வா, நிமர் பகுதிகள்.


நர்மதை இரண்டாகப் பிரிக்கும் நாடு. மாகிஷ்மதி இதன் தலைநகரம். உஜ்ஜயினி இன்னொரு பெருநகரம். கிருஷ்ணன் மணக்கும் எட்டு தேவியரில் ஒருத்தியான மித்ரவிந்தையின் தேசம்.

உபமத்ரம்

மத்ரத்தின் ஒரு பகுதி

கிருஷ்ணன் மணக்கும் எட்டு தேவியரில் ஒருத்தியான லக்ஷ்மணையின் நிலம்

கேகயம்

கங்கைக் கரை

கிருஷ்ணன் மணக்கும் எட்டு தேவியரில் ஒருத்தியான பத்ரை கேகயத்தை சேர்ந்தவள்

களிந்தகம்

யமுனைக் கரை

கிருஷ்ணன் மணக்கும் எட்டு தேவியரில் ஒருத்தியான காளிந்தியின் மச்சர் நிலம்

கிருஷ்ணவபுஸ்

காசிக்கு அருகே இருந்த கங்கைக்கரை நிலம்

கங்கைக்கரையில் சததன்வாவின் சிறுநிலம்

நாகர் உலகு

வடகிழக்கு இந்திய பகுதி

கங்கையின் துணையாறுகள் பாயும் காடுகள் கொண்ட பகுதி. அர்ஜுனன் மணக்கும் உலூபி வாழும் நிலம்

மணிபூரகம்/ மணிபுரம்       

மணிப்பூர்

அர்ஜுனன் மணக்கும் சித்ராங்கதை வாழும் தேசம். அர்ஜுனன் போருக்குப் பிறகுள்ள பயணத்தில் அவர்களது மைந்தன் பப்ருவாகனனை அங்கே சந்திக்கிறான்.

லோகதடாகம்

மணிப்பூரின் லோக்தக் ஏரி

சிறிய பசுந்தீவுகளால் ஆன மிதக்கும் நகரம் கொண்ட ஏரி

பிரபாச தீர்த்தம்

குஜராத்தின் சௌராஷ்டிரப் பகுதியில் அமைந்த சோம்நாத் என்னும் ஜோதிர்லிங்கத்தலம்

அர்ஜுனனின் பயணத்தில் அவன் செல்லும் ஒரு செங்குத்தான மலைப்பகுதி, புனிதத் தலம்

கஜ்ஜயந்தம்

குஜராத்

கஜ்ஜர்கள் வாழ்ந்த நிலம்

ரைவத மலை

குஜராத்தின் கிர்னார் என்னும் முக்கிய அருகர் தலம்

அர்ஜுனன் சுபத்திரையையும் அரிஷ்டநேமியையும் சந்திக்கும் இடம்

அங்கம்

பிகாரின் பாகல்பூர் பகுதி

கர்ணன் ஆளும் தேசம், மகதத்தை எல்லையாகக் கொண்டது

கலிங்கம்

ஒடிசா

துரியோதனனின் இரண்டாவது மனைவி சுதர்சனையும் கர்ணனின் மனைவி சுப்ரியையும் கலிங்க தேசத்து இளவரசிகள்

தாம்ரலிப்தி

மேற்கு வங்காளத்தின் தாம்லுக்

கலிங்கத் துறைமுகம்

ராஜபுரம்

கொனார்க் அருகே ஒடிசாவில் ராஜ்புர்

கலிங்க இளவரசியரைக் கவர்ந்து வர கர்ணனும் துரியோதனனும் ராஜபுரம் செல்கின்றனர்

மகதம்

பிகாரில் புத்தகயை அருகே உள்ள ராஜ்கிர் நகரைச் சுற்றியுள்ள பகுதி

ஜராசந்தனின் தேசம்.

ராஜகிருகம்

பிகாரில் உள்ள ராஜ்கிர்

ஜராசந்தன் ஆண்ட மகதத்தின் தலைநகரம்

சேதி 

உத்தரப்பிரதேச - மத்தியப்பிரதேச எல்லைப்பகுதிகளுக்கு அருகே இருந்திருக்கலாம்

சிசுபாலனின் நாடு, சூக்திமதி இதன் தலைநகரம்

புண்டரம்  

கங்கையை கந்தகி ஆறு சந்திக்கும் இடம் என்ற குறிப்பு வருவதால் பாட்னா அருகே இருந்திருக்கலாம்

வங்கத்திற்கு திறை கொடுக்கும் சிற்றரசு

கன்யாகுப்ஜம்

உத்திரப்பிரதேசத்தின் கன்னோஜ்

பீஷ்மர் கன்யாகுப்ஜத்திற்கு வணிகர்குழுவுக்கு  காவலராக செல்கிறார். கன்யாகுப்ஜத்தை ஆண்ட காதியின் கதையும் வருகிறது

இறந்த கடல்

சாக்கடல்

பாலை நிலங்களைக் கடந்து அர்ஜுனன் வருணனை சந்திக்க செல்லும் நிலத்தின் குறிப்புகள் சாக்கடலை குறிக்கின்றன

விராடதேசம்

மத்யபிரதேசத்தின் கிழக்கும் தெற்கும் 

பாண்டவர்களும் திரௌபதியும் மாற்று அடையாளங்களோடு வாழும் தேசம். அபிமன்யுவை மணக்கும் உத்தரை விராட இளவரசி

மாளவம்

மகாராஷ்டிரம், பூனா சதாரா பகுதி

மாளவத்தின் துறைமுகங்களில் அயலகக் கலங்கள் வரத்தொடங்கி அவ்வரசு வணிகவளர்ச்சி பெரும் சித்திரம் செந்நாவேங்கையில் வருகிறது. மாளவத்திலேயே மலைப்பாதைகள் அமைக்கும் வல்லுநர்களும் இருக்கிறார்கள்

ஆசுரம்

ஜார்கண்ட் சத்தீஸ்கர்

ஏகலவ்யனின் நாடு

காமரூபம்

அசாம்

“காமரூபம் முதல் காந்தாரம் வரை விரிந்திருக்கும் ஜம்புத்வீபம்” , “காமரூபத்துடன் பாரதவர்ஷம் முடிவடைகிறது” என்பது போன்ற குறிப்பகள் வருகின்றன

திராவிடம்

கிருஷ்ணைக்கும் தென்பெண்ணைக்கும் நடுவே உள்ள நிலம்

தொன்மையான நாகலந்தீவின் கீழ்நிலம் என திராவிடம் வகுக்கப்படுகிறது

தமிழ்நிலம்

தென்பெண்ணைக்குக் கீழே குமரி முனை வரை

சேரர்கள் சோழர்கள் பாண்டியர்கள் ஆளும் தமிழ்நிலம் என்ற சூதர் குறிப்பு வருகிறது, இசையிலும் மருத்துவத்திலும் சிறந்தவர்கள் என்ற குறிப்பும் வருகிறது

கின்னரநாடு

இமாச்சலில் கின்னார் மாவட்டம்

அர்ஜுனனின் பாசுபதம் நோக்கிய பயணத்தில் அவன் செல்லும் நிலம். மலைமகள் பார்வதியை அங்கு மணக்கிறான்.

சகலபுரி

சியால்கோட் - பாகிஸ்தானின் பஞ்சாபில் செனாப் நதியின் கரையில் இருக்கிறது

மத்ர தேசத்து தலைநகரம். மரங்களின் மேல் கட்டப்பட்ட நகரமாக வருகிறது

மாண்டவ வனத்தில் இருக்கும் பராசர வாவி

இமாச்சலப்பிரதேசத்தில் மண்டி என்னும் பகுதியில் மலையுச்சியில் உள்ளது

பராசரர் ஊழ்கம்  செய்த இடம்

குருக்ஷேத்திரம்/ குருஷேத்ரம்

குருக்ஷேத்திரம் ஹரியானாவில் இருக்கிறது

பெரும் போர் நிகழும் களம்   

போத நிலம்

திபெத்

பீமனின் திசைப்பயணத்தில் வரும் நிலம்

கைலாயம்  

கைலை மலை

கைலை மலை போல குறிப்புணர்த்தும் மகாபோத மலை ஒன்றைப் பற்றிய குறிப்பு பீமனின் பயணத்தில் அறிகிறான். அர்ஜுனன் கைலை மலையில் பாசுபதம் பெறுகிறான்

கின்னர கைலை

இமாச்சலப் பிரதேசத்தின் கின்னர் கைலாஷ்

இமயத்தில் சுகர் நுண்சொல் பெறும் இடம்


- மேலும்155 views

Recent Posts

See All

Comments


bottom of page